அடைமழை மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 300 பேர் பலி..

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனில் பெய்து வரும் அடைமழை மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 300 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுள் 179 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 2000 இற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் , மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டு வருவதாக ஆபிரிக்க நாட்டு செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)