அமைச்சர் விஜேதாச ஐ.தே.கட்சியில் இருந்து ஸ்ரீ.சு.கட்சிக்கு..

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களை ஐக்கிய தேசிய கட்சி வெளியேற்றுமாயின் அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கி வரவேற்கத் தயார் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் அதுக்கு எதிராக ஸ்ரீ.சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் எனவும் மேலும் அவர் கூறியிருந்தார்.

 

(rizmira)