மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான சட்டமூல வரைபு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் வெளியான தகவல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை மற்றும் பாராளுமன்றில் கேட்கப்படும் வாய்மொழி கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
எனவே குறித்த அந்நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான சட்டமூல வரைபு பணிகளை தற்போதைக்கு ஆரம்பித்துள்ளோம். மேலும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தற்போதைக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்..” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
(rizmira)