பற்களில் கறையா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..

வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று தான் பற்களில் கறை ஏற்படுவது.

உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள், உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு, பிறரிடம் பேசுவதற்கே தயக்கத்தை ஏற்படுத்திடும் பற்களின் கறையை போக்க நிறைய செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக போக்கலாம்.
கொய்யா:

தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதே போல கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனைக் கொண்டு வாயை கொப்பளித்து வாருங்கள்

ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெர்ரியில் விட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதனை ஒரு கைப்பிடியளவு, எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை பல் விளக்கியவுடன் ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு இலேசாக தேய்த்திடுங்கள். பத்துநாட்களுக்கு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் :

தினமும் கற்றாழை ஜெல் கொண்டு பற்களை தேய்த்திடுங்கள். இதனால் பற்களில் உள்ள கறை மறைவதுடன் வாய் துர்நாற்றமும் வராமல் தடுக்கிறது.

கிராம்பு :

ஒரு டீ ஸ்பூன் கிராம்பு பொடியுடன் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்திடுங்கள். சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்து விடுங்கள்

சீஸ் :

சீஸ் சாப்பிடுவதால் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து பற்களில் கறை படிவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி அவை, பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதை தடுத்திடும். இதனால் உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு சீஸ் எடுத்து கொள்வது நல்லது.

ஆப்பிள் :

உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் சாப்பிடுங்கள். இதனால் பற்கள் சுத்தமாவதோடு ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை தொடர்ந்து செய்தால் பற்களில் கறை படிவது தடுக்கப்படும்.