அணியின் வீரர்களை உதாசீனம் செய்யாதீர்கள், நம்பிக்கையூட்டுங்கள்.. – தரங்க’விடமிருந்து விசேட அறிக்கை..

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

“..சில விடயங்களை வௌிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாகவும், அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பலமாக இருந்த அணி தற்போது முகங்கொடுக்கின்ற கசப்பான நிலைமையில் அதனை மறக்க வேண்டாம்..” என்றும் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சற்று பொறுமையாக இருங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைப்பதே முக்கிய விடயம். மீண்டும் எழுவதற்கு எமக்கு பலமாக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

(rizmira)