முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று(15) குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை இடம்பெறும் இடத்திற்கு ஷிரந்தி ராஜபக்ஷ மாத்திரமே அழைக்கப்பட்ட போதும், 40 சட்டத்தரணிகள் பலவந்தமாக விசாரணை திணைக்களத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை கட்டுப்படுத்துவதற்கு விசாரணை அதிகாரிகள் பலர் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணை திணைக்கள தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களம் பலத்த பாதுகாப்பினை கொண்ட இடமாகும். அத்துடன் சோதனைக்கு உட்பட்ட பின்னர் சட்டத்திட்டங்களுக்கு அமையவே நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)