பொதுத் தேர்தலினை முன்னிட்டு ஜேவிபி கட்சியின் சின்னத்தில் மாற்றம்..

மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தற்போதைய மணிச் சின்னத்தை கைவிட்டு ஓர் பொதுவான சின்னத்தில் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

ஹங்கமவில் நேற்று(16) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“..எதிர்வரும் 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி மணிச் சின்னத்திற்கு மாறாக ஓர் பொதுவான சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும். 2020ம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பாரிய சக்தியொன்று உருவாக்கப்படும். எழுபது ஆண்டுகளாக இந்த ஆட்சியாளர்கள் நாட்டை பின்நோக்கி நகர்த்தியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்தும் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இந்த நாட்டை நேசிக்கும் பல்வேறு புத்திஜீவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது..” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)