இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் முழுமையாக தொடரினை இழந்து தோற்றமைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் அணித்தலைவர் ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய அணி, இலங்கையுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் மற்றும் ஒரு T-20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதுதொடர்பாக பேசிய அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“..இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. குறித்த இந்த தோல்விக்கு நீங்கள் எந்த ஒரு வீரரையும் குறை சொல்லக் கூடாது, இதற்கு முழு முதல் காரணம் அணி நிர்வாகத்தினர் தான். இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாக தலைவர் திலங்கா சுமதிபாலாவிடம், இலங்கை அடைந்த தோல்வி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும். எங்களிடம் தகுதியான வீரர்களை தெரிவு செய்யும் சிறப்பான தேர்வாளர்கள் இல்லை..” என கடுமையாக சாடியுள்ளார்.
(rizmira)