பிரேசில் அணியின் பிரபல உதைபந்தாட்ட வீரர் நெய்மார் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கவீனர்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வறுமைக் கோட்டிலிருக்கின்ற நாடுகளிலுள்ள அங்கவீனர்கள் மற்றும் யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள அங்கவீனர்களின் மனோ நிலையை மேன்படுத்துவதற்காகவே நெய்மார் குறித்த இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நியமனம் தொடர்பான ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம் பெற்றுள்ளது.
இதேவேளை இவ்வாறானதொரு பதவிக்கு உதைபந்தாட்ட வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் கடந்த வாரம் நெய்மார் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)