விஜயதாசவுக்கு பெண்கள் விவகாரம் தான் அத்துப்பிடி.. பதவி பொன்சேகாவிற்கு.. – அமைச்சர் ரஞ்சன் கோரிக்கை..

நீதியமைச்சு பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகினால் அந்த பதவியை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அல்லது, அஜித் பீ பெரேராவுக்கு வழங்குங்கள், பிரதி அமைச்சு பதவியை எனக்கு தாருங்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக 99% எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

விஜயதாசவுக்கு நீதி அமைச்சை விட சிறந்த பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இதனால் அவராகவே முன்வந்து நீதி அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக பெண்கள் விவகாரம் தொடர்பான அமைச்சே விஜயதாச ராஜபக்ஷவுக்கு பொருத்தமாக இருக்கும். அவ்வாறான சாதாரண அமைச்சை அவர் சிறப்பாக நடத்திச்செல்வார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி சரத் பொன்சேகா, அஜித் பீ பெரேரா அல்லது எனக்கு வழங்குங்கள். அல்லது பிரதி அமைச்சு பதவியையாவது எனக்கு வழங்குங்கள் என தாம் கோரிக்கை விடுத்ததாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)