வட, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில், மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் மற்றும் கடல் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை சற்று தீவிரமடையலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் சுமார் 75mm கன மழை பெய்யக் கூடும் எனவும் வானியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.
(rizmira)