பின்லாந்து தாக்குதலில் இருவர் பலி..- பலர் கவலைக்கிடம்..

பின்லாந்திலுள்ள டர்கு நகரில் பயங்கரவாதிகளின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்து.

சம்பவம் இடம்பெற்ற சில நொடிகளில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களின் கால்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

(rizmira)