சிங்கப்பூர் கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல் போர்க் கப்பலுடன் மோதல்

சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல், சரக்கு கப்பலுடன் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காணமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் துறைமுகத்திற்கு அப்போர்க்கப்பல் வழக்கமாகச் சென்றுகொண்டிருந்த நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிகாரிகளின் துணையுடன் மீட்புப் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

இவ் விபத்தில் 10 கடற்படை வீரர்கள் காணமல் போயுள்ளதுடன் மேலும் 5  பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.