முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு இன்று(21) நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று(21) விசாரணைக்கு வந்த போது, 75,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவரை விடுவிப்பதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் புத்திக கே. ராகல உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட ரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும், இது தொடர்பான வழக்கை மீண்டும் செப்டம்பர் மாதம் 25ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(rizmira)