இத்தாலியில் நிலநடுக்கம்..

இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று (22) அதிகாலை தீவின் முக்கிய பகுதியான காஸ்மிக்சிலோ உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ள இந் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளதகவும் அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

தேவாலயம் ஒன்று இந்நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளதாகவும் பலர் இதனால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிர் சேதம் குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.