பார்சிலோனா தாக்குதலின் பிரதான சந்தேக நபர் சுட்டுக்கொலை

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஸ்பெயின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பார்சிலோனாவின் பிரதான சுற்றுலாத்தளமான லாஸ் ரம்ப்லாஸில் மத்தியில் வாகனத்தை செலுத்திய யூனஸ் அபூயாகுப் என்ற சாரதியே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதுடன், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.