நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 25ம் திகதி முன்வைக்கப்படவுள்ள உத்தேச உள்நாட்டு இறைவரி சட்டமூலத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேசிய வருமான வரி சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்தில் வரி நிர்வாகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அத்தியாயங்கள் உள்ளதாக குறித்த ஒன்றியத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை மறுதினம்(24) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)