மேல் மாகாணத்தில் 102 பேர் கைது..

சட்டவிரோதமாக குப்பைகளை வீசி எறிந்த 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19ம் மற்றும் 20ம் திகதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

கொழும்பு, கம்பஹா, களனி, நுகேகொடை, கல்கிசை, பாணந்துறை, களுத்துறை ஆகிய பிரதேசங்களிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.