பொலன்னறுவை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க அவர்களுக்கு உரித்தான வாத்துவ, தல்பிடிய பழைய பாலத்துக்கு அருகிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்று இன்று(23) தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாத்துவ பொலிஸார், களுத்துறை தீயணைப்புப் பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இத்தீயினால் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது