அமைச்சர் விஜயதாச குறித்த விவகாரம் – ஜனாதிபதியால் கடிதம் மூலம் அறிவிப்பு..

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து பதவி நீக்கம் செய்யும் கடிதம் இன்று(23) ஜனாதிபதி செயலகத்தினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் நேற்று(22) ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஜனாதிபதி குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும் அதனை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவுக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)