அமைச்சர் ராஜித’விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று(24) அல்லது நாளை(25) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தேவையான கையொப்பங்கள் இன்று(24) மாலை நாடாளுமன்றில் வைத்து உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ளப்படும்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டு விலையை விடவும் குறைந்த விலைக்கு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு விடல், இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளில் பிரசன்னமாகாமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)