அண்மையில் வெள்ளவத்தை நோலிமிட் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக FEED THE FAMILY – 2015 RAMADAN குழுவினால் இன மத பேதமின்றி புனித ரமலானை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட போது எமது கமராவுக்குள் சிக்கிய சில காட்சிகள்…..
ஆம், கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கெடுபிடிகள் எல்லை மீறிய நிலையில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான செயற்பாடுகளாலும், அந்நிய மதங்களுக்கிடையிலான தப்பபிப்பிராயங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தருணத்திலேயே இவ்வாறான அமைப்பின் செயற்பாடானது வரவேற்கத்தக்கதொன்றாகும்.
சிறுபான்மை இனங்களுக்கிடையே குரோதத்தினை உண்டாக்கி, பல உயிர்களை காவு கொண்ட அளுத்கம கலவரத்தின் ஒரு வருடப் பூர்த்தியிலேயே இவ்வருட புனித நோன்பு ஆரம்பமானதென்பது யாவரும் அறிந்ததொன்றே…
எனினும், முஸ்லிம்களாகிய நாம் ஒன்றுக்கும் சளைத்தவர்களல்லர், எப்போதும் மாற்று மதத்தினரை அனுசரித்து அவர்களது சுக துக்கங்களில் இன மத பேதமின்றி கைகொடுக்கும் நற்குணமுடையவர்கள் என்பதும் குரோதங்களுக்கும் வைராக்கியங்களுக்கும் உடந்தையானவர்கலள்ளர் என்பதனையும் FEED THE FAMILY – 2015 RAMADAN எனும் குழு மக்கள் மத்தியில் நிலைநாட்டி விட்டார்கள் என்பதை குறித்து முஸ்லிம் உம்மத் என்ற வகையில் பெருமைப்படுகின்றோம்.
FEED THE FAMILY – 2015 RAMADAN உலர் உணவும் பொதிகளுக்காய் காத்திருக்கும் நம் அந்நிய சகோதர்கள்….
[youtube url=”https://www.youtube.com/watch?v=4pBU03f3iTY” width=”560″ height=”315″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=vrGrJ7Kn9EY” width=”560″ height=”315″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=-pMFWgO00yg” width=”560″ height=”315″]