இலங்கையில் தெற்காசியாவின் ஆற்றலை விடுவித்தல் என்ற தொனிப்பொருளில் சார்க் முதலீட்டாளர்கள் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
சார்க் அங்கத்துவ நாடுகள் மத்தியில் அதிகளவில் சமூக பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே குறித்த இந்த மாநாட்டின் பிரதான நோக்காகும்.
(rizmira)