உள்ளூராட்சி மன்ற தேர்தல் (திருத்த) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று(25) பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக குறித்த சட்டமூலத்திற்காக தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

எனினும் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

 

(rizmira)