தனியார் மயமாகிறது புகையிரத திணைக்களம்..?

புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வந்தால், புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தரமான புகையிரத சேவையை வழங்க சகல தொழிற்சங்கங்களும் புதிய ரயில்வே முகாமையாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், தான் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தொழிற்சங்க பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)