இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, தோல்வி குறித்து பணத்திற்கு பந்தயம் பிடிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் இந்தியாவின் மும்பாய் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அஹமதாபாத், டெல்லி மற்றும் டுபாய் ஆகிய இடங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த இந்த பாரிய சூதாட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சூதாட்டத்தில் 13 கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
(rizmira)