அரசை விட்டும் விலகுகிறார் ஜோன் செனவிரட்ன..

அரசை விட்டு விலக வேண்டிய காலம் வந்து விட்டதாக தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் ஆளும் கட்சியில் இணைந்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

குறித்த இந்தக் கோரிக்கை குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். 31ம் திகதி வரையில் நீடித்திருப்பதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி ஆராய்ந்து அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் ஜோன் செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)