Facebook மற்றும் Instagram முடங்கியது.. – வருந்துகின்றது நிறுவனம்..

உலகின் பிரபல சமுக வலைத்தளமான முகநூல்(facebook) இன்று(28) சிறிது நேரம் செயல்படாமல் போனமைக்கு குறித்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர்கள் Logg in செய்யும்போது, வலைத்தளத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். பேஸ்புக் சர்வர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Logg in செய்யும்போது, ‘பேஸ்புக் விரைவில் வழக்கமான வகையில் செயல்படும், தளத்தை மேம்படுத்தும் பணி நடைபெறும்போது உங்கள் பொறுமைக்கு நன்றி’ என்ற வாசகங்கள் பேஸ்புக் பக்கத்தில் தோன்றியதாக ஒரு வாடிக்கையாளர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.

பராமரிப்பு பணி காரணமாக facebook செயல்படாது என்றும், சில மணி நேரங்களில் பழைய நிலைக்கு திரும்பும் என்றும் மொபைல் பயனர்களுக்கு செய்தி வந்திருப்பதாக டவுன் டிடெக்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் இன்று செயலிழந்த அதே சமயத்தில் instagram தளமும் செயலிழந்துள்ளது.

இந்த வாரத்தில் இது இரண்டாவது முறையாக facebook செயல்பாடு முடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image result for facebook can't log in

Image result for facebook can't log in

Image result for facebook can't log in

(rizmira)