கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, தொடங்கொட, மதுகம, அகலவத்த, புலத்சிங்ஹல, இங்கிரிய, மில்லனிய, மந்துராவல, பாலிந்தநுவர, வலல்லாவிட ஆகிய பிரதேசங்களிலுள்ள 1687 குடும்பங்களுக்கு இந்த இடங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச,தொழிற்சங்கங்கள் மற்றும் காணி சீர்திருத்த சபை ஆகியவற்றுக்கு சொந்தமான 145 ஹெக்டேயர் காணிகள் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் பகுதிகள் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் பரிசோதனை நடாத்தியுள்ளதோடு அவ்வாறான பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது