20ம் அரசியலமைப்புச் சட்ட திருத்தங்கள் இன்று(28) மேல்மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சபையில் அமைதியின்மை நிலவியதினைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விவாதத்திற்கு வாக்களிக்க முன்னர் கட்சியினைக் கூட்டிய முதலமைச்சர் சட்டத்தினை மீளவும் சபையில் முன்வைக்க வேண்டும் என்ற யோசனையினை முன்வைக்கையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள் செங்கோலினியும் பறித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் செங்கோலினை தாம் கைப்பற்ற முயற்சிகையில் செங்கோல் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் தெரவிக்கப்படுகின்றது.
(rizmira)