டெக்சாஸ் மாகாணத்தில் கடும் மழையுடன் ஹார்வி புயல் தாக்கி வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று டெக்சாஸ் மாகாண ஆளுநர் க்ரெக் அப்போட் கூறியுள்ளார்.
ஹூஸ்டன் பெருநகர் பகுதியில் வெள்ளப்பெருக்கு அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அங்கு பயணம் செய்வது இயலாத ஒன்று என வானிலை அலுவலகம் கூறியுள்ளது.
புயல் பாதிப்புகளையொட்டி, ஏராளமான தங்குமிடங்களும் ஒருங்கிணைப்பு மையமும் திறக்கப்பட்டுள்ளதுடன் பலத்த காற்று வீசுவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மின்சாரம் தடைபட்டுள்ளதுடன்ஏராளமான மக்கள் தொடர்ந்து உதவிகள் கோரி வருவதால், ஹுஸ்டனில் உள்ள அமெரிக்க கடலோர காவல் படை, கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.