விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சாயிஷா சைகல்.

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக ஜுங்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடிக்க உள்ளார்.
விக்ரம் வேதாவை தொடர்ந்து ஜுங்காவிலும் டானாக நடிக்க உள்ளார். ஆனால் இது வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டானாக நடிக்க உள்ளார்.

வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டான் என்பதால் அவருக்கு ஜோடியாக ஸ்டைலிஷான எமி ஜாக்சனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கோகுலின் முதல் படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தொடங்க இருக்கிறது.