சமந்தா, தமன்னா இடையே கடும் போட்டி

தமிழ் தெலுங்கு பட உலகில் தமன்னாவும், சமந்தாவும் முன்னணி கதாநாயகிகளாக இருக்கி றார்கள். தமன்னா தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் தயாராகியுள்ள ‘பாகுபலி’ என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். அது ரிலீசுக்கு தயாராகிறது.

சமந்தா விக்ரமுடன் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். சூர்யா ஜோடியாக ‘24’ என்ற படத்திலும் நடிக்கிறார். மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது.

மகேஷ்பாபு ஜோடியாக ‘பிரமோற்சவம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இளம் ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க தமன்னா, சமந்தாவையே இயக்குனர்கள் பரிசீலிக்கின்றனர்.

‘சண்டைக் கோழி இரண்டாம் பாகம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க சமந்தா பெயர் அடிபட்டது. தற்போது அந்த படம் தமன்னா கைக்கு மாறி உள்ளது. இதுபோல் தமன்னாவுக்கு வந்த ஓரிரு படங்கள் கடைசி நேரத்தில் சமந்தாவிடம் போய் உள்ளது.

துவக்கத்தில் தமன்னாவை ஜோடியாக்கிய சில கதாநாயகர்கள் இப்போது சமந்தாவை கேட்கிறார்களாம். இதனால் இரு நடிகைகளுக்கும் பனிப்போர் நடக்கிறது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.