நாடளாவிய ரீதியில் இன்று இரவு சைட்டம் எதிர்ப்புப் போராட்டம்..

இன்று(30) இரவு நாடளாவிய ரீதியில் சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இதில், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் இன்று(30) நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.