கண்கள் கலங்கிய நிலையில் தேர்வுக் குழுவிலிருந்து விலகிச் சென்றதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரருமான சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ள்ளார்.
சனத் ஜெயசூரிய, அசங்க குருசிங்க,ரொமேஷ் களுவிதாரண,எரிக் உபஷாந்த மற்றும் ரஞ்சித் மதுசிங்க ஆகியோரே இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலம் குறித்து தாம் குறித்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தரப்பினர்களது தூண்டல், வேறுபட்ட எண்ணங்கள், விமர்சனங்கள்,ரசிகர்களது அமைதியின்மை, ஆர்ப்பாட்டம் போன்றவை இலங்கைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் சித்தரிக்கின்றதாகவும் அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(குறித்த கடிதத்தின் நகல்)


(rizmira)