பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசீ வீரவன்சவிற்கு எதிரான வழக்கொன்றில் சாட்சி வழங்குவதற்காகச் சுங்க திணைக்கள பணிப்பாளர் சுலானந்த பெரேராவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார அழைப்பாணை விடுத்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் தவறான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை தயாரித்தமை தொடர்பில் ஷசீ வீரவன்சவிற்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுலானந்த பெரேரா இதற்கு முன்னர் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)