பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய இராணுவத்திடம் அதிபர் கிம் ஜாங் உன் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஜப்பான் பகுதியின் மேலாக இந்த ஏவுகணை பயணித்துள்ளதால் அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்டோர் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஐ.நா சபையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், பசுபிக் பிராந்தியத்தில் மேலும், ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டும் என வடகொரிய இராணுவத்திடம் அதிபர் கிம் ஜாங் உன் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை தாக்குதல் நடத்த முன்னேற்பாடாக பசுபிக் பெருங்டலில் அதிகமான ஏவுகனைகள் அனுப்ப வேண்டும் என அதிபர் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.