உள்நாட்டு மருந்து உற்பத்தித் துறையில் நவெஸ்டா பாமசீயுடிகல் நோயெதிர்ப்பு ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று(30) ஹொரணயில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்துவைத்துள்ளார்.
இந்த நவெஸ்டா பாமசீயுடிகல் கம்பனியினால் 1.4 பில்லியன் முதலீட்டில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருந்து உற்பத்திச்சாலை வருடாந்தம் 50 மில்லியன் மருந்து குப்பிகளை அரச சுகாதார துறைக்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் இறக்குமதிக்காக செலவாகும் பெருமளவு பணத்தை மீதப்படுத்த முடியும்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, நவெஸ்டா பாமசீயுடிகல் கம்பனி தலைவர் சஞ்ஜய ஜயரத்ன மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குரிப்பிட்கத்தக்கது.