தொழில் அமைச்சின் ஊழியர்களது கொடுப்பனவுகள் குறைப்பு..

மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை 50% இனால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு உள்ளக சுற்றறிக்கை மூலம் நேற்று(30) அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தொழில் அமைச்சின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க போதுமான பணம் இல்லை. மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் இந்நடவடிக்கை குறித்து ஊழியர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் தொழில் அமைச்சில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

 

(rizmira)