பாதுகாப்பு தரப்பினரின் கவனத்தினை மட்டும் ஈர்த்திருந்த வடக்கில், தமிழீழ போருக்கு பின்னர் அனைத்து மக்களதும் கவனத்தையும் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மீண்டும் ஈர்த்துள்ளது.
குறித்த துண்டுப் பிரசுரங்கள் வவுனியாவில் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இதுவரையில் விநியோகித்தார்கள் என்பது குறித்து பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தனது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஒன்றில், தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய துண்டுப்பிரசுரத்தில், ‘வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்!’ என்ற தலைப்பில்;
தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை. போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்புலத்தில் இருக்கும் புள்ளிகள் அல்லது குழுக்கள் யார்? என்பது தொடர்பில் தற்போது மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கு முன்னரும் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டது தொடர்பில் பல விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்திருந்தன.
குறித்த துண்டுப்பிரசுரம்..

(rizmira)