ஸ்ரீ.சு.கட்சியின் ஆண்டு விழாவில் போதையூட்டும் பொருட்களை எடுத்துவரத் தடை..

பொரளை கெம்பல் மைதானத்தில் எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவிருக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்து உள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் அறிவித்துள்ளது.

மேலும் குறித்த விழா இடம்பெறும், பூமிக்குள் போதையில் மற்றும் போதையூட்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு வரும் எவருமே அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்துவதை குறைத்து, கூடிய வரையிலும், தனியார் பஸ்களைப் பயன்படுத்துமாறு, கட்சியின் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

 

(rizmira)