தடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலிதீன் அல்லது ஏதேனும் பொலிதீன் பொருள் பயன்பாடு அல்லது உற்பத்தி போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இன்று(01) வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி அவ்வகையான பொலிதீன்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல், இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சில நோக்கங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எழுத்து மூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் குறித்த அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
மென்தகடாக்கும் நோக்கத்திற்காக மற்றும் மாற்றீடு இல்லாத நிலையில் மருத்துவ தேவைகளின் போது சில வகையான பொலிதீன் சார்ந்த பொருட்களை இவ்வாறு எழுத்து மூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
(rizmira)