இன்று முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்…

தேசிய அடையாள அட்டைக்கு மாற்றீடாக திட்டமிடப்பட்ட இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல் அமுலுக்கு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(01) முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச தரத்திலான புகைப்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.

குறித்த புகைப்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1,700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் என்ன என்பது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தங்கள் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)