வெறும் தரையில் உறங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்..

எந்த விதமான படுக்கை நல்ல தூக்கதிற்கு சிறந்தது? எவ்வளவோ விதங்களில் இன்று மெத்தைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றை வாங்கி பயன்படுத்தினாலும், சில நாட்களில் பலவித தூக்க பிரச்சனைகள் வருகின்றன. நீண்ட நேரம் படுக்கும்போது முதுகு தண்டு வலி, தலையனை சரியாக இல்லாமல், கழுத்து வலி போன்றவை ஏற்படுகின்றன.

நல்ல தோற்றத்தை பராமரித்தல்:
உங்களுக்கு நல்ல தோற்றம் இருந்தால் , உங்களால் முதுகு பகுதியை தரையில் வைத்து படுக்க முடிந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. இந்த நிலையில் உறங்கும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது.

எலும்பு சீரமைப்பு மேம்படுத்துதல்:
உடலில் ஏற்கனவே தவறாக சீரமைக்கப்பட்ட எலும்பு மற்றும் மூட்டுகளை ரிப்பேர் செய்ய உதவுகிறது. இது மெதுவாகத்தான் நடைபெறும். ஆகவே பொறுமையாக இந்த முறையை தொடர வேண்டும். நிச்சயமாக உங்கள் உடல் சீரமைக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்டது.

உங்கள் முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கிறது:

மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். உடலில் இது ஒரு முக்கியமான பகுதியாகும். ஒரு நல்ல தோற்றம் உங்கள் முதுகு தண்டுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

இடுப்பு மற்றும் தோள் பகுதியை சீராக்குகிறது:
நமக்கு நிறைய வலிகள் ஏற்படுவது இடுப்பிலும் தோளிலும் சீரற்ற தன்மை ஏற்படுவதால் தான். தோள்கள் ,மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் உங்கள் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் நீங்கும். தோள்கள் வாளிப்பாகவும் மாறும்.

கவலை இன்றி உறங்கலாம்:
போர்வை, தலையணை என்று எதை பற்றியும் கவலை பட வேண்டாம். மெத்தை மற்றும் கட்டில் நமது எடையை தாங்குமா அல்லது உடைந்து விழுமா என்ற சந்தேகம் வேண்டாம். உங்கள் உடலை ஆசுவாசமாக தரையில் கிடத்தி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உறங்கலாம்.

சோர்வை குறைக்கிறது:
நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் தூங்கும்போது உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது. இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.

தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டோம். வீட்டில் உள்ள கட்டில் மெத்தைகளை கழற்றி வைத்து விட்டு இனி தரையில் படுத்து உறங்குவோம்