2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு பெயர் உட்சேர்க்கப்படாதோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு 18 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
2017ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை கிராம சேவகர் அலுவலகங்களில் அல்லது தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரிசீலிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, கிராம சேவகர் பிரிவை வழங்குவதன் மூலம் தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தமது பெயர்கள் தொடர்பில் பரிசீலிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களின் போது 2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் பெயர் காணப்படுகின்றவர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)