இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டு தொடரினை கைப்பற்றியது.
இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில், பதிலளித்து ஆடிய இந்திய அணி 46.3 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
அத்துடன், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 5 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)