நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை..

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடன் கூடிய  காலநிலை காரணமாக,  நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும்  நீடிக்கப்பட்டுள்ளது.

எட்டியாந்தோட்டை பிரதேசசெயலாளர் பிரிவில் சில குடும்பங்கள் இதன் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, கேகாலை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானமாக  செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.