உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடாத்துவதாயின் அதற்கு பொருத்தமாக 03 நாட்களை தேர்தல் திணைக்களம் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் நாளாக டிசம்பர் 9 ஆம் திகதி குறிக்கப்பட்டுள்ளது. எனினும், டிசம்பர் 12 ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகள் பரீட்சைத் திணைக்களத்தின் கீழ் வர வேண்டும் எனவும் பரீட்சை திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதை அடுத்து டிசம்பரில் தேர்தல் நடத்துவதற்கு வேறு திகதி இல்லாததால் ஜனவரியிலே தேர்தல் நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏனைய நாட்களாக தேர்தல் ஆணையகம் ஜனவரி 06ம் திகதி மற்றும் ஜனவரி 13ம் திகதிகளை குறித்துள்ள நிலையில் இது குறித்து தேர்தல் திணைக்களம் தீர்மானமிக்க நாள் ஒன்றினை இதுவரை குறிப்பிடவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தேஷப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)