குருநாகலையில் இரண்டு சுரங்க வழிப்பாதைகள் அமைக்கத்திட்டம்..

குருநாகலையில் பாதசாரிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை இரண்டு சுரங்க வழிப்பாதைகள் நிர்மாணிக்க ரூபா 6.5 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது

குருநாகல் பஸ் நிலையம் மற்றும் மலியதேவா கல்லூரி என்பனவற்றிற்கு முன்னால் இப்பாதைகள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.