மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்..

அனைத்து பாடசாலைகளும் இன்று(06) மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று(06) திறக்கப்படவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2017 ஆம் ஆண்டிற்காக உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் காரணமாக இம்மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.